முதல் சந்திப்பிலேயே காதலில் விழ வேண்டாம்.. டேட்டிங்கில் வைரலாகும் 3P தியரி!

3P Dating Theory: முதல் சந்திப்பிலேயே காதலில் விழ வேண்டாம்; டேட்டிங்கில் வைரலாகும் 3P தியரி குறித்து பார்க்கலாம்.

Published on: November 24, 2026 at 1:59 pm

சென்னை, நவ.24, 2026: ஒருவரை முதன்முறையாகச் சந்தித்த பிறகு அவருடன் காதல் ஏற்படுமா, மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா எனப் பலரும் சிந்திப்பது வழக்கம். இத்தகைய குழப்பங்களைக் குறைத்து, முதல் சந்திப்பை நேர்மறையாக அணுக உதவும் வகையில் சமூக வலைதளங்களில் தற்போது 3P தியரி பிரபலமாகி வருகிறது.

டேட்டிங் துறையில் பிரபலமான செரீனா கெரிகன் (Serena Kerrigan) இந்தக் கோட்பாட்டைப் பிரபலப்படுத்தியுள்ளார். இதன்படி, ஒவ்வொரு முதல் சந்திப்பும் மூன்று வகையான அனுபவங்களில் ஒன்றாக அமையும். அவை ‘Potential’ (வாய்ப்பு), ‘Plot’ (சுவாரசியமான அனுபவம்), ‘Practice’ (பயிற்சி) என்பவையாகும்.

Potential: முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் நல்ல புரிதலும், இயல்பான உரையாடலும், ஈர்ப்பும் ஏற்பட்டு மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானால் அது இந்த வகையைச் சேர்ந்தது. உடனடியாகக் காதல் அல்லது திருமணம் என்று முடிவெடுக்காமல், உறவைத் தொடர்ந்து அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இதைப் பார்க்க வேண்டும்.

Plot மற்றும் Practice: எதிர்பார்த்தபடி சந்திப்பு அமையாவிட்டாலும், அது பின்னாளில் சுவாரசியமான நினைவாக மாறலாம். அதேபோல், ஒவ்வொரு சந்திப்பும் ஒருவரின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட எல்லைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவும் அனுபவமாக அமையும். எனவே, முதல் சந்திப்பை வெற்றி அல்லது தோல்வி எனப் பார்க்காமல், அதிலிருந்து கிடைக்கும் அனுபவத்தை நேர்மறையாக அணுக வேண்டும் என்பதே 3P தியரியின் முக்கிய நோக்கமாகும்.

இதையும் படிங்க : குளிர்காலத்தை காதலுடன் கொண்டாட 6 எளிய வழிகள்.. தம்பதியர் நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com