Madurai Flower Price Hike: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
Madurai Flower Price Hike: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Published on: November 24, 2026 at 11:43 am
மதுரை, நவ.24, 2026: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த மலர் சந்தையில் புகழ்பெற்ற மதுரை மல்லிகை பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால், பூக்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தையில் குவிந்து வருகின்றனர். இதனால் பிச்சிப்பூ, முல்லைப்பூ ஆகியவை கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டன.
மற்ற பூக்களின் விலையைப் பொறுத்தவரை, வெள்ளை அரளி கிலோ ரூ.400-க்கும், சிவப்பு அரளி மற்றும் ரோஜா தலா ரூ.300-க்கும், செவ்வந்தி மற்றும் சம்பங்கி தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டன. பன்னீர் ரோஜா ரூ.150-க்கும், செண்டுமல்லி ரூ.70-க்கும் விற்பனையானது. தாமரை ஒன்று ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பனிப்பொழிவு மற்றும் குளிரான வானிலை காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்து, சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்தடுத்து சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் SCSS திட்டம்.. SBI எஃப்.டி.யுடன் ஒப்பீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com