கார்த்திகை தீப விவகாரம்.. தமிழக அரசுக்கு விஎச்பி கண்டனம்; மறுஆய்வு மனுவை திரும்பப் பெற கோரிக்கை!

Thiruparankundram Karthigai Deepam Controversy: திருப்பரன்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், தமிழக அரசுக்கு விஎச்பி கண்டனம் தெரிவித்துள்ளது; மறுஆய்வு மனுவை திரும்பப் பெறவும் கோரிக்கை.

Published on: November 24, 2026 at 11:17 am

சென்னை, நவ.24, 2026: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுவுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மனுவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விஎச்பி சர்வதேசத் தலைவர் அலோக் குமார் வெளியிட்டுள்ள காணொளி அறிக்கையில், கார்த்திகை தீபம் ஏற்றுவது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்து மத மரபு என்றும், அதற்கு எதிராக தமிழக அரசு செயல்படுவது மத வழிபாட்டு நடைமுறைகளில் தலையிடும் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் அமர்வு வழங்கிய உத்தரவுகளுக்குப் பிறகும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, நவம்பர் 24-ம் தேதி ஒருமுறை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அந்த உத்தரவை உறுதி செய்து மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விஎச்பி கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க : திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com