MK Stalin: ஃபேஷனுக்காக மட்டுமே பெரியாரை கொள்கைத் தலைவராக த.வெ.க. வைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
MK Stalin: ஃபேஷனுக்காக மட்டுமே பெரியாரை கொள்கைத் தலைவராக த.வெ.க. வைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Published on: November 23, 2026 at 4:31 pm
Updated on: November 23, 2026 at 4:34 pm
சென்னை, நவ.23, 2026: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (நவ. 22) நடைபெற்ற ‘குடிஅரசு’ இதழின் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்தார். தவெக பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டுள்ளதாகக் கூறினாலும், அவர்களின் கொள்கைகளுக்கு எதிராகவே செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
தற்போதைய ஆட்சி ஜோதிடத்தை நம்பியே நடைபெறுவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், மூடநம்பிக்கையில் மூழ்கியிருப்பவர்கள் ஃபேஷனுக்காக மட்டுமே பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்களாக வைத்துள்ளதாக விமர்சித்தார். பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், ‘குடிஅரசு’ இதழ் சாதிய ஏற்றத்தாழ்வுகள், மதவாதம், பெண்ணடிமைத்தனம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான அறிவாயுதமாகத் திகழ்ந்ததாகக் கூறினார். தடைகள் வந்தபோதும் பெரியார் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து சமூகப் பணியாற்றியதாகப் பாராட்டினார்.
தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், முன்பு மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே போட்டி நிலவுவதாகக் கூறியிருந்ததாகவும், தற்போது போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் இடையே போட்டி நிலவுவதாகவும் விமர்சித்தார். அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்குத் தொல்லை கொடுப்பதில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே போட்டி நிலவுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க : முதலமைச்சர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்.. உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com