Senior Citizens Savings Scheme vs SBI FD: மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை எஸ்.பி.ஐ வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியுடன் ஒப்பீட்டு பார்க்கலாம்.
Senior Citizens Savings Scheme vs SBI FD: மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை எஸ்.பி.ஐ வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியுடன் ஒப்பீட்டு பார்க்கலாம்.

Published on: November 23, 2026 at 5:36 pm
சென்னை, நவ.23, 2026: ஓய்வுக்காலத்தில் பாதுகாப்பான முதலீட்டுடன் நிலையான வருமானம் பெற விரும்பும் மூத்த குடிமக்களுக்கு, அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) 5 ஆண்டு சிறப்பு வைப்பு நிதித் திட்டம் (FD) ஆகியவை முக்கியத் தேர்வுகளாக உள்ளன. இந்த இரு திட்டங்களின் வட்டி விகிதம் மற்றும் வருமானத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.
தற்போது SCSS திட்டம் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்குகிறது. இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. மறுபுறம், SBI-யின் 5 ஆண்டு மூத்த குடிமக்கள் எஃப்.டி. திட்டம் ஆண்டுக்கு 7.05 சதவீத வட்டி வழங்குகிறது. இதில் காலாண்டு வட்டி பெறும் வசதியையும் தேர்வு செய்யலாம்.
உதாரணமாக, ரூ.7 லட்சத்தை SCSS திட்டத்தில் முதலீடு செய்தால், காலாண்டுக்கு சுமார் ரூ.14,350 வட்டியாகக் கிடைக்கும். 5 ஆண்டுகளில் மொத்த வட்டி வருமானம் ரூ.2.87 லட்சமாக இருக்கும். அதே தொகையை SBI எஃப்.டி.யில் முதலீடு செய்தால், காலாண்டுக்கு சுமார் ரூ.12,337 கிடைக்கும்; 5 ஆண்டுகளில் மொத்த வட்டி ரூ.2,46,750 ஆக இருக்கும்.
இந்த ஒப்பீட்டின்படி, அதிக வட்டி மற்றும் காலாண்டு வருமானத்தை விரும்பும் மூத்த குடிமக்களுக்கு SCSS திட்டம் கூடுதல் பலன் அளிக்கிறது. இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன்பு திட்டத்தின் விதிமுறைகள், வரி விதிப்பு மற்றும் பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கான நிபந்தனைகளைச் சரிபார்ப்பது அவசியம்.
இதையும் படிங்க : 16 நாட்களாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 உயர்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com