World Women’s Snooker Championship : உலக ஸ்னூக்கர் பட்டத்தைத் தக்கவைத்துள்ளார் அனுபமா ராமச்சந்திரன்.
World Women’s Snooker Championship : உலக ஸ்னூக்கர் பட்டத்தைத் தக்கவைத்துள்ளார் அனுபமா ராமச்சந்திரன்.

Published on: November 23, 2026 at 5:00 pm
புதுடெல்லி, நவ.23, 2026: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஐபிஎஸ்எஃப் (IBSF) உலக மகளிர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அனுபமா ராமச்சந்திரன் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளார். இறுதிப்போட்டியில் ஹாங்காங் வீராங்கனை சோ மான் யானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியின் முதல் ஃபிரேமில் அனுபமா 16-58 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். இருப்பினும், அடுத்தடுத்த ஃபிரேம்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 83-7, 85-26, 65-37 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஐபிஎஸ்எஃப் உலக மகளிர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டத்தை தொடர்ந்து இரண்டு முறை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அனுபமா படைத்துள்ளார். கடந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற போட்டியில் முதல்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவின் முதல் பெண் உலக ஸ்னூக்கர் சாம்பியன் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் அனுபமாவுக்கு 4,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. சொந்த நாட்டில், சொந்த ரசிகர்கள் முன்னிலையில் பட்டத்தைத் தக்கவைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : விவசாய குடும்பம் டூ ரூ.85 கோடி வருமானம்.. முகமது ஷமி சாதித்தது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com