ஏ.ஐ மூலம் ஆபாசமாக மாற்றப்படும் சினிமா காட்சிகள் – தடுக்கப்படுமா?

AI Misuse in Cinema Scenes: ஏ.ஐ மூலம் ஆபாசமாக மாற்றப்படும் சினிமா காட்சிகள் தடுக்கப்படுமா? என்ற கேள்வியெழுந்துள்ளது.

Published on: November 23, 2026 at 4:58 pm

சென்னை, நவ.23, 2026: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ் சினிமாவின் பிரபலமான காட்சிகளை ஆபாசக் காணொலிகளாக மாற்றி சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்கு உதவினாலும், சிலர் அதனைத் தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் நடிகைகளின் புகைப்படங்களை ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் சித்தரித்து போலியான படங்களை வெளியிட்டு வந்தனர். உண்மையான புகைப்படங்களுக்கும் ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலிப் படங்களுக்கும் இடையே வேறுபாடு கண்டறிவது கடினமாக இருப்பதால், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் இதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தற்போது அடுத்தகட்டமாக, தமிழ் திரைப்படங்களின் காட்சிகளையே ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசக் காணொலிகளாக மாற்றி வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, ‘டியூட்’ மற்றும் ‘வல்லவன்’ திரைப்படக் காட்சிகள் இவ்வாறு மாற்றப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுவரை நடிகைகளின் புகைப்படங்கள் மட்டுமே இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில், தற்போது திரைப்படக் காட்சிகளும் அதில் நடித்த நடிகர்களும் கொச்சைப்படுத்தப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற போலிக் காணொலிகளை உருவாக்கி வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் முதன்முறையாக இரட்டை கன்சோல் ரோபோட்டிக் இதய அறுவை சிகிச்சை சாதனை.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com