Anaemia Among Tamil Nadu Women: தமிழகத்தில் 53% பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு காணப்படுவது, ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Anaemia Among Tamil Nadu Women: தமிழகத்தில் 53% பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு காணப்படுவது, ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published on: November 25, 2026 at 6:07 pm
சென்னை, நவ.25, 2026: தமிழகத்தில் குழந்தை பெறும் வயதுடைய பெண்களில் 52.8 சதவீதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 15 முதல் 49 வயதுக்குட்பட்ட கர்ப்பிணி அல்லாத, பாலூட்டாத பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2023 முதல் 2025ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43.3 சதவீதம் பேருக்கு ரத்தசோகை உள்ளது. இது தேசிய சராசரியான 41.8 சதவீதத்தைவிட அதிகமாகும்.
அதேநேரத்தில், தமிழகத்தில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 35.9 சதவீதம் பேருக்கும், சிறுவர்களில் 15.5 சதவீதம் பேருக்கும் ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 20 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்களில் 51.4 சதவீதம் பேருக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. ஆண்களிடையே இது 17.3 சதவீதமாக உள்ளது.
பெண்கள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை பாதிப்புகளில் சுமார் பாதியளவுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. நோய்த்தொற்றுகள், ரத்த அணுக் கோளாறுகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் ஏற்படும் அழற்சியும் ரத்தசோகைக்குக் காரணமாக இருக்கலாம் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முதல் சந்திப்பிலேயே காதலில் விழ வேண்டாம்.. டேட்டிங்கில் வைரலாகும் 3P தியரி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com