Sathyabama University Convocation 2026: சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 2026-ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நவம்பர் 23-ம் தேதி பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.
Sathyabama University Convocation 2026: சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 2026-ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நவம்பர் 23-ம் தேதி பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.

Published on: November 25, 2026 at 5:49 pm
சென்னை, நவ.25, 2026: சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 2026-ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நவம்பர் 23-ம் தேதி பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. தமிழக சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் மொத்தம் 167 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் நர்சிங் பிரிவில் 57 பேரும், மருந்தியல் பட்டயப் பிரிவில் 5 பேரும், பல் மருத்துவ முதுநிலைப் பிரிவில் 9 பேரும், ஆன்லைன் எம்.பி.ஏ. பிரிவில் 96 பேரும் பட்டம் பெற்றனர்.
நர்சிங் பிரிவில் முதலிடம் பிடித்த மகிதா தர்ஷினி எம்., டி.எம்.டி. ஹில்டா பாப்பி நெஸ்டர் விருதுடன் தங்கப்பதக்கம் பெற்றார். அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த முத்துலட்சுமி, சண்முகப்பிரியா, ஸ்வாதி, அமிர்தா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, 2025-26 கல்வியாண்டில் நர்சிங் படிப்பை முடித்த 58 மாணவர்களுக்கும் 100 சதவீத வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் ஜெர்மனியிலும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்.
இதையும் படிங்க : அரசு மருத்துவமனைகளில் புதிதாக 1,695 செவிலியர் பணியிடங்கள்.. தமிழ்நாடு அரசு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com