கனடா லாட்டரில் ரூ.30 கோடி பரிசு.. மலையாள அம்மணிக்கு அதிர்ஷ்டம்!

Kerala Woman Wins Canada Lottery Jackpot: கனடாவில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார்.

Published on: November 25, 2026 at 2:08 pm

ஒட்டவா, நவ.25, 2026: கனடாவில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார். இதன் மூலம் ஒரே நாளில் அவரது வாழ்க்கையே மாறியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினேகா ஜாய், கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலுக்குப் பிறகு, ‘லோட்டோ ஸ்பாட்’ செயலியில் தனது சீட்டைச் சரிபார்த்துள்ளார். அப்போது, கிளாசிக் ஜாக்பாட் பிரிவில் 6 எண்களும் சரியாகப் பொருந்தியதால், அவருக்கு இந்தப் பரிசு கிடைத்தது தெரியவந்தது.

தனக்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், இந்த வெற்றி அதிர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகிய உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் சினேகா தெரிவித்துள்ளார்.

பரிசுத் தொகையில் முதலில் தனது வீட்டுக் கடனை முழுமையாக அடைக்கப் போவதாகவும், அதன்பிறகு உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், குடும்பத்தினருடன் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :நெதன்யாகு – ஐசன்காட் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: இஸ்ரேலில் அடுத்து என்ன நடக்கும்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com