சபரிமலையில் சுகாதாரமற்ற கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.. அதிரடி நடவடிக்கை!

Sabarimala Hygiene Rules: சபரிமலையில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 29 விதிமீறல் வழக்குகளில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Published on: November 25, 2026 at 1:59 pm

Updated on: November 25, 2026 at 2:00 pm

பத்தனம்திட்டா, நவ.25, 2026: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில், வருடாந்திர மண்டல யாத்திரை காலத்திற்காக கடந்த நவம்பர் 17-ந்தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை வரும் டிசம்பர் 27-ந்தேதி நடைபெறும் நிலையில், அன்றைய தினம் நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு யாத்திரைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெற்று, ஜனவரி 19-ந்தேதி வரை தரிசனத்திற்குப் பிறகு ஜனவரி 20-ந்தேதி கோவில் நடை மூடப்படும்.

தற்போது மண்டல பூஜை சீசன் களைகட்டியுள்ளதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக கேரள அரசும், தேவசம் போர்டும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

இந்த நிலையில், சபரிமலை கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் கடைகளில் உள்ளாட்சி துறை, வருவாய், சுகாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், மொத்தம் 29 விதிமீறல் வழக்குகளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்க/விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் கடைகள் குறித்த புகார்கள் மீது அதிகாரிகள் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அதோடு, குறைவான அளவு மற்றும் எடைகளில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சபரிமலை பக்தர்களுக்காக விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு நேரடி ஏசி பேருந்துகள்.. முழு விவரம்!

சபரிமலை பக்தர்களுக்காக விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு நேரடி ஏசி பேருந்துகள்.. முழு விவரம்!
Sabarimala Pilgrims Bus Service

சபரிமலை பக்தர்களுக்காக விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு நேரடி ஏசி பேருந்துகள்.. முழு

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்: பாரம்பரிய நடனம், பாடல்களுடன் பக்தர்கள் உற்சாகம்!
Hethai Amman Festival Celebration

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்: பாரம்பரிய நடனம், பாடல்களுடன் பக்தர்கள் உற்சாகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com