Nilgiris Tiger Sighting: நீலகிரி மாவட்டம் முதுமலை சாலையில் புலி ஒன்று சாலையில் சர்வசாதாரணமாக நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். புலி சாலையில் உலா வரும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Nilgiris Tiger Sighting: நீலகிரி மாவட்டம் முதுமலை சாலையில் புலி ஒன்று சாலையில் சர்வசாதாரணமாக நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். புலி சாலையில் உலா வரும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Published on: November 25, 2026 at 1:48 pm
நீலகிரி, நவ.25, 2026: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சாலைகளில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது காணப்படுகிறது. இந்நிலையில், முதுமலை சாலையில் புலி ஒன்று சாலையில் நடமாடிய காட்சி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புலி, வாகனங்கள் செல்லும் சாலையில் சர்வசாதாரணமாக நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கியதுடன், புலியின் நடமாட்டத்தைக் கண்டு பீதியடைந்தனர்.
முதுமலை புலிகள் காப்பகம் புலிகள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகளில் வனவிலங்குகள் கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, வனவிலங்குகளின் இயல்பான நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
இதனிடையே, சாலையில் புலி தென்பட்டால் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்றும், புலியைப் பின்தொடர்வது, ஒலி எழுப்புவது, அருகில் சென்று புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் வனவிலங்கு பாதுகாப்பு விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com