சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது நில அளவை கல்.. தமிழக தொல்லியல் துறை

Thiruparankundram Deepam Controversy: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; நில அளவைக் கல் என தமிழக தொல்லியல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: November 25, 2026 at 12:58 pm

மதுரை, நவ.25, 2026: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே அமைந்துள்ள சர்ச்சைக்குரிய கல் தூண், தீபத்தூண் அல்ல என்றும், அது நில அளவைக்காக அமைக்கப்பட்ட தூண் என்றும் தமிழக தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் நிலப்பரப்பைத் துல்லியமாக அளவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கோணவியல் நில அளவைத் திட்டத்தின் (GTS) ஒரு பகுதியாக இந்தத் தூண் அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மலைப் பகுதிகளில் மொத்தம் 484 நில அளவை நிலையங்கள் நேரில் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் மற்றும் பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும் நில அளவைப் பணிகளுடன் தொடர்புடையவை என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாக அறிக்கை கூறுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுவுக்கு இந்த ஆய்வறிக்கை முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : கார்த்திகை தீப விவகாரம்.. தமிழக அரசுக்கு விஎச்பி கண்டனம்; மறுஆய்வு மனுவை திரும்பப் பெற கோரிக்கை!

ராஜினாமா செய்ய முடிவு செய்தாரா கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Arul Vignesh Resignation

ராஜினாமா செய்ய முடிவு செய்தாரா கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்? அரசியல் வட்டாரத்தில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com