Arul Vignesh Resignation: ராஜினாமா செய்ய முடிவு செய்தாரா கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்? தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Arul Vignesh Resignation: ராஜினாமா செய்ய முடிவு செய்தாரா கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்? தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: November 25, 2026 at 12:47 pm
சென்னை, நவ.25, 2026: கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 3 பிரிவுகள் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் போலீசார் முதல்கட்ட விசாரணையும் நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விசாரணையை கண்காணிக்கும் அதிகாரியாக ஐஜி காமினி நியமிக்கப்பட்டுள்ளார். எம்எல்ஏவிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மனும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கையை எதிர்கொள்ளும் முன்பாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ராஜினாமா செய்ததாகவோ, அதற்கான கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாகவோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதையும் படிங்க : பெண் ஐஏஎஸ் அதிகாரி புகார் அளிக்கவில்லை.. சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com