ரேணுகாசாமி கொலை வழக்கு: 2-வது முறையாக ஜாமீன் கோரி நடிகை பவித்ரா கவுடா மனு!

Pavithra Gowda Bail Petition: ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை பவித்ரா கவுடா, 2-வது முறையாக ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

Published on: November 25, 2026 at 5:17 pm

பெங்களூரு, நவ.25, 2026: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகக் குறிப்பிடப்படும் பவித்ரா கவுடா, கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் மீண்டும் ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, பவித்ரா கவுடாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, அவர் பெங்களூரு 59-வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் நாராயணசாமி மூலம் மீண்டும் ஐகோர்ட்டை அணுகியுள்ளார்.

தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில், வழக்கின் முக்கிய சாட்சிகள் பலரும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது வாக்குமூலங்களில் தமக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்றும் பவித்ரா கவுடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உரிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கர்நாடக ஐகோர்ட்டு, மாநில அரசின் பதிலைக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நீதிபதி எஸ். விஸ்வஜித் ஷெட்டி அமர்வு இந்த மனுவை விசாரித்தது. ஜாமீன் வழங்குவது குறித்து இதுவரை எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படாத நிலையில், அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்!

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்புக்கு எதிர்ப்பு.. டிசம்பர் 7-ல் சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம்.. கிருஷ்ணசாமி அறிவிப்பு
Sandiyar Title Controversy

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்புக்கு எதிர்ப்பு.. டிசம்பர் 7-ல் சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம்..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com