பாலியல் புகார் எதிரொலி.. பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?

Muthukumar Sexual Harassment Controversy: பாலியல் புகார் எதிரொலியாக, பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன் தலைமறைவாகிவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: November 24, 2026 at 12:44 pm

சென்னை, நவ.24, 2026: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முத்துக்குமரன் ஜெகதீசன் மீது இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளப் பிரபலமான அந்தப் பெண், முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்ததாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், திருமண வாக்குறுதி உள்ளிட்ட ஏமாற்று வழிமுறைகள் மூலம் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படும் குற்றத்துக்கான பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 69-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முத்துக்குமரன், இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகியதாகவும், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருத்தப்பட்ட வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும் கூறி ஏற்கெனவே எதிர்புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே, முத்துக்குமரனின் வீட்டுக்குச் சென்ற போலீசார், வீடு பூட்டியிருப்பதையும், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் புகார் தொடர்பாக முத்துக்குமரனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்புக்கு எதிர்ப்பு.. டிசம்பர் 7-ல் சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம்.. கிருஷ்ணசாமி அறிவிப்பு

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்புக்கு எதிர்ப்பு.. டிசம்பர் 7-ல் சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம்.. கிருஷ்ணசாமி அறிவிப்பு
Sandiyar Title Controversy

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்புக்கு எதிர்ப்பு.. டிசம்பர் 7-ல் சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம்..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com