Asareeri Movie Release Date: ஃபகத் பாசில் – பிரேம் குமார் கூட்டணியில் ‘அசரீரி’ திரைப்படம் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகிறது.
Asareeri Movie Release Date: ஃபகத் பாசில் – பிரேம் குமார் கூட்டணியில் ‘அசரீரி’ திரைப்படம் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகிறது.

Published on: November 25, 2026 at 7:24 pm
சென்னை, நவ.25, 2026: நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில், ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஃபகத் பாசில், இயக்குநர் பிரேம் குமார் இணையும் முதல் திரைப்படம் இதுவாகும். ‘96’, ‘மெய்யழகன்’ ஆகிய உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை இயக்கிய பிரேம் குமார், தற்போது முதல்முறையாக திரில்லர் கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இப்படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடித்துள்ளார். மேலும் சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்க, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இஷாரி கே. கணேஷ் வழங்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், மான்சூன் மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க : 1980க்கு பின் மீண்டும், ‘மேளா’ படத்தில் மம்முட்டி.. கதைக் களம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com