Mammootty Mela Movie Update: மம்மூட்டியின் ‘மேளா’ திரைப்படம் 100 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்தது.
Mammootty Mela Movie Update: மம்மூட்டியின் ‘மேளா’ திரைப்படம் 100 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்தது.

Published on: November 25, 2026 at 6:29 pm
Updated on: November 25, 2026 at 6:30 pm
திருவனந்தபுரம், நவ.25, 2026: மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘மேளா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதனைப் படத்தை வழங்கும் மம்மூட்டி கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இப்படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பையும் படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. மம்மூட்டியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனியின் 9-வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது. இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்ய, அனுராஜ் ஓ.பி. மற்றும் நிதிஷ் சஹாதேவ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
இப்படத்தை மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதே பெயரில் 1980-களில் வெளியான திரைப்படத்திலும் மம்மூட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ‘மேளா’ படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க : ரேணுகாசாமி கொலை வழக்கு: 2-வது முறையாக ஜாமீன் கோரி நடிகை பவித்ரா கவுடா மனு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com