ஜீவாவின் தகப்பன் திரைப்படம்.. டிச.24 ரிலீஸ்!

Thagappan Movie Release Date: ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திற்கு யு/ஏ 13+ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது; படம், டிசம்பர் 24-ல் வெளியாகிறது.

Published on: November 25, 2026 at 6:17 pm

சென்னை, நவ.25, 2026: நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கியுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு/ஏ 13+ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை நடிகர் ஜீவா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அப்பா – மகன் இடையேயான பாசப்பிணைப்பு, குடும்ப உறவுகள் மற்றும் மனிதநேய உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க : ரேணுகாசாமி கொலை வழக்கு: 2-வது முறையாக ஜாமீன் கோரி நடிகை பவித்ரா கவுடா மனு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com