Shruti Haasan New Movie: தருண் தேஜா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்கின்றனர்.
Shruti Haasan New Movie: தருண் தேஜா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்கின்றனர்.

Published on: November 25, 2026 at 10:01 pm
சென்னை, நவ.25, 2026: நடிகை ஸ்ருதி ஹாசன், இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் வெளியிட்டுள்ளது.
‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் தருண் தேஜா. இப்படத்தை அவரே எழுதி இயக்க உள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார்.
‘மாவீரன்’, ‘3BHK’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள சாந்தி டாக்கீஸ் நிறுவனம், இந்தப் படத்தின் மூலம் மற்றொரு புதிய கதைக்களத்தைக் கையாள உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தின் தலைப்பு, கதைக்களம், ஸ்ருதி ஹாசனுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஃபகத் பாசில் – பிரேம் குமார் கூட்டணியில் ‘அசரீரி’ திரைப்படம்; ஜனவரி 1-ல் வெளியீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com