ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 6-வது இடத்துக்கு முன்னேறிய ரிஷப் பண்ட்.. பும்ராவுக்கும் ஏற்றம்!

ICC Test Rankings: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து, ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ரிஷப் பண்ட், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். பந்துவீச்சு தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ராவும் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Published on: November 26, 2026 at 1:17 pm

சென்னை, நவ.26, 2026: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இந்திய வீரர்களின் சிறப்பான பேட்டிங் ஆட்டம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 128 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். 98 ரன்கள் எடுத்த கேப்டன் சுப்மன் கில் 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தையும், 85 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் மூன்று வீரர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வீரர்களில் கே.எல்.ராகுல் 136 ரன்கள் எடுத்ததன் மூலம் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தைப் பிடித்துள்ளார். 80 ரன்கள் எடுத்த தேவ்தத் படிக்கல் 15 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3 இடங்கள் முன்னேறி இங்கிலாந்து வீரர் ஒல்லி ராபின்சனுடன் இணைந்து 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நியூசிலாந்து வீரர்களில் ஹென்றி நிக்கோல்ஸ் 10 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தையும், கிளென் பிலிப்ஸ் 13 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரவரிசையான 17-வது இடத்தையும் பிடித்துள்ளனர். வங்காளதேச வீரர் தவ்ஹித் ஹிரிடாய் 28 இடங்கள் முன்னேறி 33-வது இடத்தையும், லிட்டன் தாஸ் 9 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தையும் பிடித்துள்ளனர். தென்னாப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் தனது சிறந்த தரவரிசையான 15-வது இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா 2 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட், தென்னாப்பிரிக்கா – வங்காளதேசம் முதல் டெஸ்ட் மற்றும் பாகிஸ்தான் – இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்தப் புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐ.பி.எல். 2027 ஏலம்: அடிப்படை விலையை அறிவித்த 14 இந்திய வீரர்கள்.. அதிகபட்சம் எவ்வளவு தெரியுமா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com