Bangladesh Political Tension: வங்கதேசத்தில் டிசம்பரில் அரசியல் கட்சிகள் தொடர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன. ஷேக் ஹசீனா நாடு திரும்பும் திட்டத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Bangladesh Political Tension: வங்கதேசத்தில் டிசம்பரில் அரசியல் கட்சிகள் தொடர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன. ஷேக் ஹசீனா நாடு திரும்பும் திட்டத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Published on: November 29, 2026 at 1:30 pm
டாக்கா, நவ.29, 2026: வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் எதிர்காலம் மற்றும் அவர் நாடு திரும்பும் திட்டம் தொடர்பாக அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP), எதிர்க்கட்சிகளான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) ஆகியவை டிசம்பர் மாதம் முழுவதும் நாடு தழுவிய பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனா, டிசம்பர் 16-ம் தேதி வங்கதேசம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவாமி லீக் கட்சியின் அரசியல் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் முயற்சிகளைத் தடுப்பதற்காகத் தெருக்களில் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக மூன்று கட்சிகளும் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, குறிப்பாக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆளும் பிஎன்பி கட்சி, டிசம்பர் 1-ம் தேதி தலைநகர் டாக்காவில் உள்ள சுஹ்ரவர்தி உத்யானில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான தாரிக் ரஹ்மான், டிசம்பர் மாதத்திற்கான அரசியல் செயல்திட்டத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய குடிமக்கள் கட்சி டிசம்பர் 31-ம் தேதி வரை 39 நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத் திட்டத்தையும், ஜமாத்-இ-இஸ்லாமி டிசம்பர் மாதத்தில் 40 நாள் நிகழ்ச்சிகளையும் அறிவித்துள்ளன.
இதற்கிடையே, பிரதமர் தாரிக் ரஹ்மான் நவம்பர் 23-ம் தேதி தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அவாமி லீக் கட்சியின் எதிர்காலம், வாக்கெடுப்பு முடிவுகளைச் செயல்படுத்துவதற்கான அரசின் திட்டம் மற்றும் இந்தியாவுடனான உறவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜமாத் உள்ளிட்ட பிற கட்சிகளுடனும் ஆலோசனை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஷேக் ஹசீனா நாடு திரும்புவது தொடர்பான அறிவிப்பால் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் வங்கதேசத்தில் தொடர்ந்து கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : உலகின் 16 பகுதிகளில் பசி, உணவுப் பஞ்சம் அதிகரிக்கும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com