Kanimozhi Amit Shah Meeting: அமித்ஷாவை சந்தித்தது கூட்டணி அமைக்க அல்ல; திமுகவின் நிலைப்பாட்டை விளக்கவே என கனிமொழி தெரிவித்துள்ளார்.
Kanimozhi Amit Shah Meeting: அமித்ஷாவை சந்தித்தது கூட்டணி அமைக்க அல்ல; திமுகவின் நிலைப்பாட்டை விளக்கவே என கனிமொழி தெரிவித்துள்ளார்.

Published on: November 29, 2026 at 1:37 pm
புதுடெல்லி, நவ. 29, 2026: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது அரசியல் கூட்டணி அமைப்பதற்காக அல்ல என்றும், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதற்காகவே என்றும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். டெல்லியில் அமித்ஷாவின் இல்லத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் அவரைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில் திமுகவின் தீர்மானத்தை அமித்ஷாவிடம் நேரில் வழங்கியதாக கனிமொழி தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பி.வில்சன் உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக கனிமொழி விளக்கினார். குறிப்பாக, 1971-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதன்படி, தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, திமுக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பிரிந்துள்ள நிலையில், அமித்ஷாவுடனான இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்பை கூட்டணி தொடர்பான நகர்வாகப் பார்க்கக் கூடாது என்றும், மசோதா குறித்த கட்சியின் முடிவை அரசிடம் தெரிவிப்பதே நோக்கம் என்றும் கனிமொழி தெளிவுபடுத்தியுள்ளார். வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் விவாதத்திற்கு வரவுள்ளன.
இதையும் படிங்க : தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டை மாற்றியது காங்கிரஸ்.. ஆ.ராசா விமர்சனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com