Delimitation Bill : தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், 3 ஆண்டு போராட்டத்துக்கு வெற்றி என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Delimitation Bill : தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், 3 ஆண்டு போராட்டத்துக்கு வெற்றி என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Published on: November 28, 2026 at 5:11 pm
Updated on: November 28, 2026 at 9:20 pm
சென்னை, நவ.28, 2026: மத்திய அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் எந்தச் சூழலிலும் குறைக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என திமுக தொடர்ந்து எச்சரித்து வந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாக, தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலான இரண்டு முக்கிய கோரிக்கைகள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும், மொத்தத் தொகுதிகளில் தமிழகத்தின் தற்போதைய பங்களிப்பு சதவீதம் குறையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, போதிய ஆலோசனையும் விவாதத்திற்கான கால அவகாசமும் வழங்கப்படாததால் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை திமுக எதிர்த்திருந்தது. தற்போது தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் ஆதரவு அளிப்பதாக திமுக தெரிவித்துள்ளது. அதேவேளையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் திமுக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க : பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்: தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com