திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுடர்விட்ட கார்த்திகை தீபம்.. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா“ என பக்தர்கள் பரவசம்!

Thiruparankundram Deepam: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என பக்தர்கள் முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Published on: November 28, 2026 at 7:43 pm

Updated on: November 28, 2026 at 9:21 pm

மதுரை, நவ. 28, 2026: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், எஸ். பார்த்திபன் ஆகியோரின் மேற்பார்வையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என பக்தர்கள் முழக்கமிட்டனர். மலை அடிவாரத்தில் மேளதாளங்கள் முழங்கவும், பட்டாசுகள் வெடிக்கவும் பக்தர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளன்று உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த நிலையில், மலைமீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தன்று ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் செயல்பட வேண்டும் என்றும், இதுகுறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், அந்த உத்தரவின்படி மலைத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, உத்தரவைச் செயல்படுத்தாதது குறித்து கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, கோவில் ஸ்தானீகர்களுடன் ஆலோசித்து மலைத்தூணில் தீபம் ஏற்றவும், தர்காவை ஒட்டிய 50 மீட்டர் பகுதியைப் பாதுகாக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, தீபம் ஏற்றும் நிகழ்வைக் கண்காணிக்க 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர், சிஆர்பிஎப் ஐ.ஜி. மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். பாதுகாப்புப் பணிக்காக சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், கூடுதலாக 400 வீரர்களும் திருப்பரங்குன்றத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அனுமதி பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் மலை உச்சிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுடர்விட்ட கார்த்திகை தீபம்.. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா“ என பக்தர்கள் பரவசம்!
Thiruparankundram Deepam

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுடர்விட்ட கார்த்திகை தீபம்.. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா“ என

என்எல்சியில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!
NLC Graduate Trainee Recruitment 2026

என்எல்சியில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com