திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Tirupparankundram Deepam Order: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை மாதம் முடிவதற்குள் மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பை சி.ஆர்.பி.எப். வசம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Published on: November 27, 2026 at 7:09 pm

புதுடெல்லி, நவ.27, 2026: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24-ஆம் தேதி தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவைத் தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் செயல்படுத்தவில்லை எனக் கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை முழுவதற்குமான பாதுகாப்புப் பொறுப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஏற்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், கோயில் மற்றும் தர்கா ஆகிய இரண்டுக்கும் பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தியது. தர்காவிலிருந்து குறைந்தது 50 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றவும், பக்தர்கள் அனைவரும் அதில் பங்கேற்க அனுமதிக்கவும் உத்தரவிட்டது. உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சுடர் எடுத்துச் சென்று தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்றும் தெரிவித்தது.

மேலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்த உச்ச நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோரைப் பொறுப்பாளர்களாக நியமித்தது. தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com