கூட்டுறவு சங்கங்கள் மூலமும் டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதி.. தமிழக அரசு உத்தரவு!

TASMAC Cooperative Society Management: கூட்டுறவு சங்கங்கள் மூலமும் டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: November 27, 2026 at 2:41 pm

சென்னை, நவ.27, 2026: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நடத்தும் நடைமுறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, டாஸ்மாக் நிறுவனம் நேரடியாக நடத்தும் கடைகளுடன், அதன் முகவர்களாகச் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் மதுபானக் கடைகளை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அரசாணையை தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் மொத்தம் 22,877 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அரசாணையின்படி, ஒவ்வொரு மதுபானக் கடைக்கும் தனித்தனியாக அங்கீகாரம் வழங்கப்படும். டாஸ்மாக் நிறுவனம் நேரடியாக நடத்தும் கடைகள் எவை, கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் கடைகள் எவை என்ற விவரங்கள் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இதற்கான அதிகாரம் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மதுபானக் கடைகளின் பட்டியலை டாஸ்மாக் நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். புதிதாகக் கடை தொடங்கப்பட்டாலோ அல்லது கடையின் செயல்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டாலோ, 10 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு தனியாக மதுபான விற்பனை உரிமம் வழங்கப்படாது என்றும், அவை டாஸ்மாக் நிறுவனத்தின் முகவர்களாக மட்டுமே செயல்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரசு மருத்துவமனைகளில் புதிதாக 1,695 செவிலியர் பணியிடங்கள்.. தமிழ்நாடு அரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com