Bypolls Allowed in Ambai, Perundurai : அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Bypolls Allowed in Ambai, Perundurai : அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: November 27, 2026 at 11:54 am
சென்னை, நவ.27, 2026: தமிழகத்தில் அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான சட்டத் தடை நீங்கியுள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. வெங்கடாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராகத் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை நீக்கி உத்தரவிட்டது. அதேநேரத்தில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகே இடைத்தேர்தல் நடத்த முடியும் என்றும் தெரிவித்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காலியாக உள்ள கொளத்தூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : தேனியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு.. பண்டைய வானியல் அறிவுக்கு ஆதாரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com