Sharad Pawar Supports Delimitation Bill : தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு அளித்துள்ளார் என தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
Sharad Pawar Supports Delimitation Bill : தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு அளித்துள்ளார் என தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Published on: November 28, 2026 at 12:23 pm
மும்பை, நவ.28, 2026: மத்திய அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஜிதேந்திர அவாத் தெரிவித்துள்ளார். மும்பையில் சரத் பவாரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முடிவை அறிவித்தார்.
தொகுதி மறுவரையறை என்பது அரசியலமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்றும், அதைத் தவிர்க்க முடியாது என்றும் சரத் பவார் தன்னிடம் தெரிவித்ததாக ஜிதேந்திர அவாத் கூறினார். மேலும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களிலும் சமமாக 50 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கட்சி ஆதரவு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மசோதாவின் முழு விவரங்களையும் ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். மசோதாவின் நகலைப் பார்க்காமல் கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இதனால் கட்சிக்குள் மசோதா தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் நிலவுவது தெரியவந்துள்ளது.
நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்த மசோதா விவாதத்திற்கு வரவுள்ளது. இதையொட்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எட்டு மக்களவை உறுப்பினர்களும் கூட்டத்தொடர் முழுவதும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மூன்று வரி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com