Hosur Electric Vehicle Factory: ஓசூரில் ரூ.779 கோடியில் மின்சார வாகனத் தொழிற்சாலையில், 2.5 லட்சம் வாகனங்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hosur Electric Vehicle Factory: ஓசூரில் ரூ.779 கோடியில் மின்சார வாகனத் தொழிற்சாலையில், 2.5 லட்சம் வாகனங்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Published on: November 27, 2026 at 12:03 pm
சென்னை, நவ.27, 2026: தமிழகத்தின் ஓசூரில் மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராவயலெட் (Ultraviolette), தனது புதிய BIGGA (Big Global Ambition) தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. தமிழக அரசின் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2026’ நிகழ்ச்சியின்போது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
சுமார் ரூ.779 கோடி முதலீட்டில், ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இங்கு முதற்கட்டமாக ஆண்டுக்கு 2.5 லட்சம் மின்சார வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையைப் பொறுத்து உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்களாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தொழிற்சாலையில் நிறுவனத்தின் டெஸரக்ட் (Tesseract) மின்சார ஸ்கூட்டர் மற்றும் ஷாக்வேவ் (Shockwave) மின்சார மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் தயாரிக்கப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பம், தானியங்கி இயந்திரங்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு வசதிகளுடன் இந்த ஆலை உருவாக்கப்பட உள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மின்சார வாகனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஓசூரின் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு கட்டமைப்பு மற்றும் பெங்களூருவுக்கு அருகாமையில் இருப்பது தொழிற்சாலை அமைக்க முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தங்கம் விலை 30% சரிவு; அடகு வைத்த நகைகளுக்கு கூடுதல் பணம் செலுத்த நெருக்கடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com