St. Xavier’s Church Festival : தூத்துக்குடி புனித சவேரியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
St. Xavier’s Church Festival : தூத்துக்குடி புனித சவேரியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Published on: November 27, 2026 at 12:15 pm
தூத்துக்குடி, நவ.27, 2026: தூத்துக்குடி அருகே உள்ள சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, இந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி மாலை தொடங்கியது.
விழாவில் திசையன்விளை பங்குத்தந்தை அந்தோணி டக்ளஸ் தலைமை தாங்கி திருவிழாக் கொடியை ஏற்றி வைத்தார். பூச்சிக்காடு பங்குத்தந்தை ஜார்ஜ் ஆலிபன் சிறப்பு மறையுரை நிகழ்த்தினார். தாளமுத்துநகர் பங்குத்தந்தை செல்வரத்தினம் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகின்றன. 9-ஆம் திருநாளான டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான 10-ஆம் திருநாள் டிசம்பர் 3-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு புனித சவேரியாரின் சப்பர பவனி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை.. தமிழக பக்தர் நேர்த்திக்கடன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com