தங்கம் விலை 30% சரிவு; அடகு வைத்த நகைகளுக்கு கூடுதல் பணம் செலுத்த நெருக்கடி!

Gold Loan Repayment Pressure: தங்கம் விலை 30% சரிவு கண்டுள்ள நிலையில், அடகு வைத்த நகைகளுக்கு கூடுதல் பணம் செலுத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Published on: November 27, 2026 at 11:30 am

சென்னை, நவ.27, 2026: தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது சுமார் 30 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தங்கத்தின் மதிப்பு குறைந்ததால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகையைச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.

கடந்த ஜனவரி 29-ம் தேதி 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,34,400 என்ற உச்ச விலையை எட்டியது. ஆனால், நவம்பர் 23-ம் தேதி ஒரு கிராம் ரூ.11,600 ஆகவும், ஒரு சவரன் ரூ.92,800 ஆகவும் குறைந்தது. இதனால் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் மதிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் அடமான மதிப்பு விகித (LTV) விதிமுறைகளின்படி, நகைகளின் தற்போதைய மதிப்புக்கு ஏற்ப கடன் தொகையைப் பராமரிக்க வேண்டியுள்ளது. இதனால் கடன் பெற்றவர்கள் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும் அல்லது கூடுதல் தங்க நகைகளை அடமானமாக வழங்க வேண்டும் என நிதி நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

குறிப்பிட்ட காலத்திற்குள் கூடுதல் தொகையைச் செலுத்தத் தவறினால், அடமானம் வைக்கப்பட்ட நகைகள் ஏலம் விடப்படும் அபாயம் உள்ளது. மேலும், கடனை முறையாகச் செலுத்தாதது சிபில் (CIBIL) கடன் மதிப்பெண்ணையும் பாதிக்கக்கூடும் என வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க : தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு.. ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 960 அதிகரிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com