ஆண் ஊழியர்களுக்கும் 15 நாட்கள் தந்தையர் விடுப்பு.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

Paternity Leave: தமிழ்நாடு அரசு ஆண் ஊழியர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்க முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்போ அல்லது பிறந்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாகவோ இந்த விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Published on: November 26, 2026 at 3:48 pm

சென்னை, நவ.26, 2026: தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி, திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருந்து உதவுவதற்காக 15 நாட்கள் விடுப்பு வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஏற்கனவே 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஆண் ஊழியர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று அரசுப் பணியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

குழந்தை பிறக்கும் காலகட்டம் தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு அளிப்பதுடன், குழந்தையைப் பராமரிப்பதிலும் தந்தையின் பங்கு அவசியம் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த விடுப்பு உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, திருமணமான ஆண் அரசு ஊழியர்கள் 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பைப் பெறலாம். இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி தழைத்தோங்கட்டும்.. அரசியலமைப்பு நாளில் முதல்மைச்சர் விஜய் வாழ்த்து!

ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி தழைத்தோங்கட்டும்.. அரசியலமைப்பு நாளில் முதல்மைச்சர் விஜய் வாழ்த்து!
Constitution Day 2026

ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி தழைத்தோங்கட்டும்.. அரசியலமைப்பு நாளில் முதல்மைச்சர் விஜய் வாழ்த்து!

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Cauvery Gundar Link Project

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com