ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி தழைத்தோங்கட்டும்.. அரசியலமைப்பு நாளில் முதல்மைச்சர் விஜய் வாழ்த்து!

Constitution Day 2026: இந்திய அரசியலமைப்பு நாளையொட்டி, ஜனநாயகம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி தழைத்தோங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்களையும் அவர் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார்.

Published on: November 26, 2026 at 2:28 pm

சென்னை, நவ.26, 2026: இந்திய அரசியலமைப்பு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்த நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தொடர்ந்து தழைத்தோங்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளம் பெருக அரசு துணை நிற்கும்.. முதலமைச்சர் விஜய் உறுதி

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Cauvery Gundar Link Project

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ்

தேனியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு.. பண்டைய வானியல் அறிவுக்கு ஆதாரம்!
Ancient Burial Sites in Theni

தேனியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு.. பண்டைய வானியல் அறிவுக்கு ஆதாரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com