Thiruparankundram Deepam Issue: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததாகக் கூறி, முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Thiruparankundram Deepam Issue: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததாகக் கூறி, முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Published on: November 26, 2026 at 1:44 pm
Updated on: November 26, 2026 at 1:45 pm
சென்னை, நவ.26, 2026 :திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஜி.பானுபிரகாஷ் ரெட்டி சார்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்காக வழக்கறிஞர் கே.அஜய்குமார் அனுப்பியுள்ள நோட்டீஸில், திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமல்படுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதால் மட்டும் அந்த உத்தரவு தானாகவே நிறுத்தி வைக்கப்படாது என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீதிமன்றம் உத்தரவை நிறுத்தி வைக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ செய்யாதவரை, அதனை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்கீல் நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனைச் செயல்படுத்தத் தவறியதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளம் பெருக அரசு துணை நிற்கும்.. முதலமைச்சர் விஜய் உறுதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com