உதயநிதி பிறந்தநாள் பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்!

Udhayanidhi Birthday Banner Accident: உதயநிதி பிறந்தநாள் பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயமுற்றார்.

Published on: November 27, 2026 at 11:44 am

சென்னை, நவ.27, 2026: திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு திமுக நிர்வாகிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கல் அருகே உள்ள வாணியஞ்சத்திரம் பகுதியில் இன்று (நவம்பர் 27) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் வாணியஞ்சத்திரத்தைச் சேர்ந்த வீரேந்தர் (22), காரணி கிராமத்தைச் சேர்ந்த வேலன் (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் வாணியஞ்சத்திரத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் (22) என்பவர் படுகாயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலையோரத்தில் பேனர் அமைத்துக் கொண்டிருந்தபோது அருகில் சென்ற மின்சாரக் கம்பி உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :ஆண் ஊழியர்களுக்கும் 15 நாட்கள் தந்தையர் விடுப்பு.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Bypolls Allowed in Ambai, Perundurai

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com