ஆளுநரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்; திமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்!

Manickam Tagore Criticism: தமிழக ஆளுநரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ள நிலையில், திமுகவை விமர்சித்துள்ளார் மாணிக்கம் தாகூர்.

Published on: November 27, 2026 at 11:53 am

சென்னை, நவ.27, 2026: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை சந்தித்து புகார் மனு அளித்ததற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பெண் அதிகாரி புகார் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும் ஆளுநரிடம் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், முன்பு திமுகவினர் ஆளுநரை ‘வெறும் தபால்காரர்’ என்று விமர்சித்துவிட்டு, தற்போது அதே ஆளுநரிடம் மனு அளிக்கச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சியில் இருந்தபோது ஆளுநர் பதவி தேவையில்லை என்று முழங்கியவர்கள், தற்போது ஆட்சியை இழந்ததும் ஆளுநர் மாளிகை வாசலில் நிற்பதாகவும் விமர்சித்துள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலினின் தற்போதைய அணுகுமுறை ஆளுநர் மற்றும் பாஜகவின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதாகவும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க : உதயநிதி பிறந்தநாள் பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Bypolls Allowed in Ambai, Perundurai

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி தழைத்தோங்கட்டும்.. அரசியலமைப்பு நாளில் முதல்மைச்சர் விஜய் வாழ்த்து!
Constitution Day 2026

ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி தழைத்தோங்கட்டும்.. அரசியலமைப்பு நாளில் முதல்மைச்சர் விஜய் வாழ்த்து!

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Cauvery Gundar Link Project

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com