Tenkasi Wild Elephant Threat: தென்காசி மேக்கரை பகுதியில் முகாமிட்ட 9 காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Tenkasi Wild Elephant Threat: தென்காசி மேக்கரை பகுதியில் முகாமிட்ட 9 காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Published on: November 27, 2026 at 2:14 pm
தென்காசி, நவ.27, 2026: தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மேக்கரை பகுதியில் 9 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறிய இந்த யானைக் கூட்டம், வெள்ளிக்கிழமை மேக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு அருகே நடமாடி வருகிறது. இதனால் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்திவிடுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் யானைகள் நடமாடுவதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்கவும், அவற்றைப் பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com