பிரியங்கா நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’.. ‘கே.ஜி.எஃப்.’ இசையமைப்பாளர் இசை!

AGS 29 Shooting Wraps Up: ஜெய் – பிரியங்கா அருள் மோகன் நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

Published on: November 28, 2026 at 3:01 pm

சென்னை, நவ.28, 2026: நடிகர் ஜெய், நடிகை பிரியங்கா அருள் மோகன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஏஜிஎஸ் 29’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனைப் படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் எழுதி இயக்கும் இப்படம், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 29-வது தயாரிப்பாகும். படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடும் காட்சிகள் அடங்கிய Behind The Scenes வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

ஜெய், பிரியங்கா அருள் மோகன் ஆகியோருடன் யோகி பாபு, நாசர், ஜி.எம். சுந்தர் மற்றும் இயக்குநர் ராஜீவ் மேனன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரியங்கா மோகனின் முதல் தோற்றப் போஸ்டரில் இடம்பெற்றிருந்த பிரெய்லி எழுத்துகள், அவர் பார்வைக் குறைபாடு கொண்ட பெண்ணாக நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு ‘கே.ஜி.எஃப்.’ பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படிங்க : 61 ஆண்டு கால காவியம்.. மீண்டும் தியேட்டரில் திருவிளையாடல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com