ஸ்ரியா வலிமையும் மென்மையும் கொண்டவர்.. ‘மகாகாளி’ இயக்குநர் பாராட்டு!

Sriya Reddy Praise: “ஸ்ரியா ரெட்டி வலிமையும் மென்மையும் ஒருங்கே கொண்டவர்” என ‘மகாகாளி’ இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Published on: November 29, 2026 at 2:47 pm

சென்னை, நவ. 29, 2026: ‘மகாகாளி’ திரைப்படத்தின் இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு, நடிகை ஸ்ரியா ரெட்டியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார். ஸ்ரியா ரெட்டி வலிமையும் மென்மையும் ஒருங்கே கொண்டவர் என்றும், ஆற்றலும் கருணையும் நிறைந்தவர் என்றும் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்றவர்களை அன்பாகவும் அக்கறையுடனும் உணரச் செய்யும் அழகான குணம் ஸ்ரியா ரெட்டியிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். “எனது மகாகாளி” என்று குறிப்பிட்டு, அவர் மற்றவர்களுக்குக் கொடுக்கும் அன்பு பன்மடங்காக அவருக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் (PVCU) அடுத்த படமாக உருவாகி வரும் ‘மகாகாளி’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘ஐகிரி நந்தினி’ அண்மையில் வெளியானது. ஸ்மரன் சாய் இசையமைத்துள்ள இப்பாடலை அனிலா ராஜீவ், கீதா மாதுரி, சாய் சரண் ஆகியோர் பாடியுள்ளனர்.

முன்னதாக, அக்ஷய் கன்னா இடம்பெற்ற அதிரடியான டீசரும் வெளியாகி கவனம் பெற்றது. பூமி ஷெட்டி, மகாகாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரோஹித் சரஃப், அக்ஷய் கன்னா, ஸ்ரியா ரெட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2027 ஜனவரி 8-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சந்தானத்தின் ‘லவ் பைட்’ திரைப்படம்.. டிசம்பர் 18 ரிலீஸ்!

இந்தியாவில் பாகிஸ்தான் வெப் தொடர்களை வெளியிடக் கூடாது: நெட்ஃபிளிக்ஸுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
Pakistani Web Series Ban in India

இந்தியாவில் பாகிஸ்தான் வெப் தொடர்களை வெளியிடக் கூடாது: நெட்ஃபிளிக்ஸுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com