Transgender Education Scholarship: உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி சார்பில், 2026–27 கல்வியாண்டுக்கான திருநங்கையர் கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Transgender Education Scholarship: உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி சார்பில், 2026–27 கல்வியாண்டுக்கான திருநங்கையர் கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Published on: October 14, 2026 at 4:13 pm
சென்னை, அக்.14, 2026: உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி சார்பில், 2026–27 கல்வியாண்டுக்கான திருநங்கையர் கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டம் வங்கியின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) முயற்சியாக, Buddy4Study அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒருமுறை கல்வி உதவித்தொகையாக அதிகபட்சம் ரூ.40,000 வழங்கப்படும்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள திருநங்கையர் மாணவர்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அரசு அல்லது தனியார் திறந்தநிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்பவர்கள் மற்றும் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலைப் படிப்புகளைத் தொடரும் மாணவர்கள் தகுதியுடையவர்கள். கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கல்வி தொடர்பான செலவுகளுக்கு இந்த உதவித்தொகையைப் பயன்படுத்தலாம்.
விண்ணப்பங்களை இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் www.b4s.in/dtnt/USFB2 என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 30, 2026 ஆகும். தகுதியுள்ள மாணவர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து இந்தக் கல்வி உதவித்தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு.. 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com