கேம்பஸ் இன்டர்வியூவ் வேலைவாய்ப்பில் பாதிப்பு இல்லை.. அண்ணா பல்கலை

Anna University: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாக வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்ந்து சீராக இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Published on: October 8, 2026 at 2:09 pm

சென்னை, அக்.8, 2026: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாக வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்ந்து சீராக இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதாவது, உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையில் மந்தநிலை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரிப்பு போன்ற சவால்கள் இருந்தபோதிலும், வளாக வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்ந்து சீராக 2024-25 கல்வியாண்டில் வளாகத் தேர்வுக்கு தகுதி பெற்ற 2,331 மாணவர்களில் 1,339 பேர் 34 நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர். 2025-26 கல்வியாண்டில் தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை 2,607 ஆக உயர்ந்த நிலையில், 33 நிறுவனங்கள் மூலம் 1,623 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

இதனால் வேலைவாய்ப்பு விகிதம் முந்தைய ஆண்டின் 57.4%-லிருந்து 62.3% ஆக அதிகரித்தது. நடப்பு 2026-27 வேலைவாய்ப்பு பருவத்தில் இதுவரை 34 நிறுவனங்கள் மூலம் 301 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அக்டோபர் மாதம் முதல் பல முக்கிய பொறியியல் மற்றும் உற்பத்தித் துறை நிறுவனங்கள் வளாகத்துக்கு வரவுள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு வேலைவாய்ப்பு பருவத்தில் அதிக ஊதிய தொகுப்புகளும் மாணவர்களுக்கு கிடைத்துள்ளன. இதுவரை 60 மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.25 லட்சத்துக்கும் அதிகமான ஊதியத் தொகுப்புகளை பெற்றுள்ளனர். இதில் 14 மாணவர்கள் அமேசான் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.46 லட்சம் ஊதியத் தொகுப்பைப் பெற்றுள்ளனர். மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையைத் தாண்டி இயந்திரவியல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் போன்ற முக்கிய பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. உற்பத்தி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட மையப் பொறியியல் துறைகள் அதிகளவில் மாணவர்களைத் தேர்வு செய்வது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மாணவர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்க அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பேராசிரியர்கள் தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைக்கு ஏற்ற நிறுவனங்களின் வளாகத் தேர்வுக்கு பரிந்துரைக்க உள்ளனர். இதன் மூலம் அதிக மாணவர்கள் வேலைவாய்ப்பு செயல்முறையில் பங்கேற்க முடியும் என சி.யூ.ஐ.சி இயக்குநர் கே. சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இயற்பியலுக்கான நோபல் பரிசு பெரும் பெல்ஜியம் விஞ்ஞானி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com