BC, MBC & Minority Scholarships: தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான 2026–27ஆம் கல்வியாண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
BC, MBC & Minority Scholarships: தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான 2026–27ஆம் கல்வியாண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

Published on: October 5, 2026 at 12:04 pm
சென்னை, அக்.5, 2026: தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான 2026–27ஆம் கல்வியாண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. பிரதமரின் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் தகுதியான மாணவர்கள், மேலும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டுகால இளங்கலைப் படிப்பில் 3ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வருமான உச்சவரம்பு உள்ளிட்ட நிபந்தனைகள் இல்லாமல் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள மாணவர்கள் தமிழ்நாடு அரசின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது கல்லூரியில் உள்ள உதவித்தொகை ஒருங்கிணைப்பாளர் அல்லது சம்பந்தப்பட்ட நோடல் அலுவலரை அணுகி, தேவையான விவரங்களை சமர்ப்பித்து விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 21 என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை தொடர்பாக மேலும் விளக்கங்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், மாணவர்கள் தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலரை அணுகலாம். தகுதியுள்ள மாணவர்கள் கடைசி நாளுக்காக காத்திருக்காமல், உரிய கல்லூரி அலுவலர்களை அணுகி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறு துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரூ.75,000 வரை முழு கல்விக் கட்டண விலக்கு.. இந்த ஸ்காலர்ஷிப் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com