ரெப்போ வட்டி விகிதம் உயர்கிறதா? புதிய வட்டி விகிதம் என்னவாக இருக்கும்?

RBI MPC Meeting : அக்டோபர் 5 முதல் 7-ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.

Published on: October 5, 2026 at 12:14 pm

மும்பை, அக்.5, 2026: அக்டோபர் 5 முதல் 7-ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

தற்போதைய ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக உள்ள நிலையில், பணவீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய அளவில் வட்டி விகிதங்கள் உயர்ந்து வருவது ஆகிய காரணங்களால் அக்டோபர் கூட்டத்திலேயே ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் வட்டி உயர்த்தலாம் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பிப்ரவரி 2023-க்குப் பிறகு முதல் வட்டி உயர்வாக இருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மேற்காசிய பிராந்திய பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வதும், ரூபாய் மதிப்பு சரிவும் பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகளாக பார்க்கப்படுகின்றன. இதனால் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக நிர்ணயிக்கலாம் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், வட்டி உயர்வு எவ்வளவு காலம் தொடரும் என்பதில் நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. சிலர் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தலா 25 அடிப்படை புள்ளிகள் உயர்வு ஏற்பட்டு, ரெப்போ விகிதம் 5.75 சதவீதத்தை எட்டலாம் என கணிக்கின்றனர். அதேவேளையில், சில பொருளாதார நிபுணர்கள் அக்டோபர் கூட்டத்தில் வட்டி விகிதத்தை மாற்றாமல் தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: செல்வ மகள் சேமிப்பு திட்டம், பி.பி.எஃப்.. புதிய வட்டி விகிதம் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com