துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.187.56 கோடி சேமிப்பு.. தமிழ்நாடு அரசு

Tur Dal Procurement : முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.187.56 கோடி சேமித்துள்ளது.

Published on: October 5, 2026 at 12:35 pm

சென்னை. அக்.5, 2026 : தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை, முந்தைய ஆட்சிக் காலத்தைவிட குறைந்த விலையில் தற்போதைய தவெக அரசு கொள்முதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) செப்டம்பர் முதல் வழங்குவதற்காக துவரம் பருப்பை சராசரியாக கிலோ ரூ.77.89க்கு கொள்முதல் செய்துள்ளது. இதே அளவு, தரம் மற்றும் விவரக்குறிப்புகளுடன் முந்தைய திமுக ஆட்சியில் கிலோ ரூ.109.15க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.31.26 குறைந்துள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் 60 ஆயிரம் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தவெக அரசு ரூ.467.34 கோடி செலவிட்டுள்ளது. இதே அளவு துவரம் பருப்பை முந்தைய திமுக அரசு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ரூ.654.9 கோடிக்கு கொள்முதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய கொள்முதல் விலையால் கடந்த 3 மாதங்களில் மட்டும் அரசுக்கு ரூ.187.56 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறுகையில், தற்போதைய கொள்முதலில் தரம் அல்லது விவரக்குறிப்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், நடைமுறையில் உள்ள அனைத்து டெண்டர் விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த முறை அதிக எண்ணிக்கையிலான சப்ளையர்கள் டெண்டரில் பங்கேற்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் கொள்முதல் விலை 29 சதவீதம் குறைந்திருப்பது, முந்தைய காலத்தில் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 மானிய விலையில் வழங்கப்படுகிறது. மாதத்திற்கு சுமார் 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு விநியோகத்திற்காக ஒதுக்கப்படுகிறது; இதில் 86 முதல் 88 சதவீத அட்டைதாரர்கள் அதைப் பெறுகின்றனர். தற்போதைய ரூ.77.89 கொள்முதல் விலையை அடுத்த 9 மாதங்களுக்கான மூன்று டெண்டர்களிலும் தொடர்ச்சியாகப் பெற முடிந்தால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.750 கோடி வரை சேமிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : செல்வ மகள் சேமிப்பு திட்டம், பி.பி.எஃப்.. புதிய வட்டி விகிதம் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com