Rajya Sabha Polls : உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கு தொழிலதிபர் பின்னணி கொண்ட திருபாய் நாத்வானியின் மகன் தன்ராஜ் பரிமல் நாத்வானியை வேட்பாளராக அறிவித்துள்ளது.
Rajya Sabha Polls : உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கு தொழிலதிபர் பின்னணி கொண்ட திருபாய் நாத்வானியின் மகன் தன்ராஜ் பரிமல் நாத்வானியை வேட்பாளராக அறிவித்துள்ளது.

Published on: October 5, 2026 at 12:56 pm
Updated on: October 5, 2026 at 1:09 pm
புதுடெல்லி, அக்.5, 2026: உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கு தொழிலதிபர் பின்னணி கொண்ட திருபாய் நாத்வானியின் மகன் தன்ராஜ் பரிமல் நாத்வானியை வேட்பாளராக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவுடன் இணைந்து தன்ராஜ் நாத்வானியும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான இந்தத் தேர்வு, சமாஜ்வாதி கட்சியின் வழக்கமான அரசியல் அணுகுமுறையில் இருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
40 வயதான தன்ராஜ் நாத்வானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியாக உள்ளார். அவர் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். மேலும், குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அவரது தந்தை பரிமல் நாத்வானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் விவகாரங்கள் பிரிவில் முக்கிய பொறுப்பு வகிப்பதுடன், ஜார்க்கண்டில் இருந்து சுயேச்சை மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து நான்காவது முறையாக பதவி வகித்து வருகிறார். பரிமல் நாத்வானியின் தற்போதைய மாநிலங்களவை பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமாஜ்வாதி கட்சி பொதுவாக பின்தங்கியோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய ‘PDA’ அரசியல் முழக்கத்தை முன்னிறுத்தி வரும் நிலையில், பெருநிறுவனத் துறையைச் சேர்ந்த ஒருவரை மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்ராஜ் நாத்வானியின் வேட்புமனு, கட்சியின் சோசலிசக் கொள்கைகளில் இருந்து விலகிய முடிவு என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதற்கு பதிலளிக்கும் வகையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகளை மேற்கோள் காட்டி, தொழில்துறையுடன் தொடர்பு வைத்திருப்பது கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது அல்ல என விளக்கம் அளித்துள்ளனர்.
தன்ராஜ் நாத்வானியை வேட்பாளராக தேர்வு செய்தது குறித்து அகிலேஷ் யாதவ், புதிய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்ப வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பல அரசியல் கட்சிகளுக்கும் பெருநிறுவன உலகத்துடன் தொடர்பு இருப்பதால், சமாஜ்வாதி கட்சியும் தொழில் உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையின் அடிப்படையில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 8 இடங்களைப் பெறும் அளவுக்கு பலம் உள்ளதாகவும், காங்கிரஸ் ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சிக்கு 2 இடங்களைப் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 10 இடங்களுக்கும் அதிகமான வேட்பாளர்கள் இறுதியில் களத்தில் இருந்தால், அக்டோபர் 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
இதையும் படிங்க : BNS முழுமையான அமல்.. 3 ஆண்டுக்குள் வழக்கு முடிக்கப்படும்.. அமித் ஷா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com