Sukanya Samriddhi Yojana: 2026-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கான சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.
Sukanya Samriddhi Yojana: 2026-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கான சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.

Published on: October 4, 2026 at 3:23 pm
சென்னை, அக்.4, 2026: 2026-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கான சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.
செப்டம்பர் 30-ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2026-27 நிதியாண்டின் 3-வது காலாண்டிலும் முந்தைய காலாண்டில் இருந்த அதே வட்டி விகிதங்களே தொடரும். இதன்படி, பொது வருங்கால வைப்பு நிதியான பி.பி.எஃப்-க்கு 7.1 சதவீதமும், தேசிய சேமிப்புச் சான்றிதழான என்.எஸ்.சி-க்கு 7.7 சதவீதமும், செல்வமகள் சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனாக்கு 8.2 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமான எஸ்.சி.எஸ்.எஸ்-க்கு 8.2 சதவீதமும், அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.5 சதவீதமும் வட்டி தொடர்கிறது. அஞ்சலக சேமிப்புக் கணக்கிற்கு 4 சதவீதமும், 1 ஆண்டு கால அஞ்சலக வைப்பு திட்டத்திற்கு 6.9 சதவீதமும், 2 ஆண்டு கால வைப்புக்கு 7 சதவீதமும், 3 ஆண்டு கால வைப்புக்கு 7.1 சதவீதமும், 5 ஆண்டு கால வைப்புக்கு 7.5 சதவீதமும் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு தொடர் வைப்பு திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிலும் மறுஆய்வு செய்து அறிவித்து வருகிறது. அக்டோபர்-டிசம்பர் 2026 காலாண்டிலும் அனைத்து திட்டங்களின் வட்டி விகிதங்களும் மாற்றமின்றி தொடர்வதால், ஏற்கனவே பி.பி.எஃப், என்.எஸ்.சி, செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கும், இந்த காலாண்டில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள விகிதங்களே பொருந்தும்.
குறிப்பாக பி.பி.எஃப் வட்டி 7.1 சதவீதமாகவும், செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் எஸ்.சி.எஸ்.எஸ் ஆகிய இரண்டும் 8.2 சதவீதமாகவும் தொடர்கின்றன.
இதையும் படிங்க : ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் இன்சூரன்ஸ்.. புதிய சி.இ.ஓ நியமனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com