Bhagyashree Borse: நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், ஃப்ளைதுபாய் விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Bhagyashree Borse: நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், ஃப்ளைதுபாய் விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Published on: October 4, 2026 at 4:48 pm
சென்னை, அக்.4, 2026: நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், ஃப்ளைதுபாய் விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜார்ஜியாவில் மோகன்லால் நடிக்கும் ‘ஆபரேஷன் கங்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் அவர், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேப்டன் ஸ்மித்தை “Real Life Hero” என குறிப்பிட்டு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆபத்தான தருணத்தில் கடமையை மேற்கொண்ட அவரது துணிச்சலைப் பாராட்டியதுடன், “இந்தியா உங்களை நினைத்து பெருமை கொள்கிறது” என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தில் 174 பேர் பயணம் செய்த நிலையில், துணை விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கியதாகவும், விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த போதிலும் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவைத் திறக்கச் செய்து, பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் தலையிட்டு தாக்கியவரை கட்டுப்படுத்துவதற்கு வழிவகுத்தார். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
கேப்டன் ஸ்மித் மச்சாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் அவரை பாராட்டியதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். நடிகர்கள் சல்மான் கான், அனில் கபூர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டியுள்ள நிலையில், தற்போது பாக்யஸ்ரீ போர்ஸும் அவருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நடிகை ரெஜினா கசாண்ட்ரா புதிய படம்.. இறுதிக் கட்டத்தில் படப்பிடிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com