சில்வர் ETF முதலீடு, 56 சதவீத இழப்பு.. என்ன காரணம்?

Silver ETF Investment: கடந்த ஓராண்டில் வெள்ளியின் விலை 98 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், சில்வர் ETF-களில் முதலீடு செய்த சராசரி முதலீட்டாளருக்கு கிடைத்த வருமானம் 18 சதவீதமாக மட்டுமே காணப்படுகிறது.

Published on: October 4, 2026 at 5:02 pm

சென்னை, அக்.4, 2026: கடந்த ஓராண்டில் வெள்ளியின் விலை 98 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், சில்வர் ETF-களில் முதலீடு செய்த சராசரி முதலீட்டாளருக்கு கிடைத்த வருமானம் 18 சதவீதமாக மட்டுமே இருந்ததாக DSP மியூச்சுவல் ஃபண்டின் செப்டம்பர் 2026 அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 12 மாதங்களில் சில்வர் ETF-களில் முதலீடு செய்யப்பட்ட பணத்தில் 56 சதவீதம், 2026 ஜூலை 31 நிலவரப்படி இழப்பில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக முதலீட்டாளர்கள் வெள்ளியின் விலை ஏற்கனவே வேகமாக உயர்ந்த பின்னர் அதிகளவில் முதலீடு செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026 ஜனவரியில் மட்டும் சில்வர் ETF-களில் ரூ.11,761 கோடி முதலீடு செய்யப்பட்டது. இது அந்த காலகட்டத்தின் மிகப்பெரிய மாதாந்திர முதலீடாக இருந்ததுடன், வெள்ளி விலை உயர்ந்திருந்த காலத்திலும் அதிக பணம் சந்தைக்குள் வந்ததை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வெள்ளியின் ஒட்டுமொத்த வருமானமும், முதலீட்டாளர் உண்மையில் பெறும் வருமானமும் வெவ்வேறாக இருக்கலாம் என்பதை இந்த தரவுகள் காட்டுகின்றன. முதலீடு செய்த நேரம் மற்றும் விலை ஆகியவை வருமானத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, கடந்த காலத்தில் கிடைத்த அதிக வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எதிர்கால வருமானத்தையும் அதே அளவில் எதிர்பார்க்கக்கூடாது என அறிக்கை வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க : செல்வ மகள் சேமிப்பு திட்டம், பி.பி.எஃப்.. புதிய வட்டி விகிதம் என்ன?

இ.பி.எஃப் உறுப்பினர்கள் இ.பி.எஸ் திட்டத்தில் இணைய வாய்ப்பு; புதிய ஊதிய வரம்புக்குள் இருப்பவர்கள் யார்?
New EPS Scheme

இ.பி.எஃப் உறுப்பினர்கள் இ.பி.எஸ் திட்டத்தில் இணைய வாய்ப்பு; புதிய ஊதிய வரம்புக்குள் இருப்பவர்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com