தனுஷ்- மம்முட்டி படம்.. ஓம் எப்போது வெளியீடு.. வெளியான தகவல்!

Dhanush and Mammootty: தனுஷ் மற்றும் மலையாள நடிகர் மம்முட்டி இணைந்து நடித்துள்ள ‘ஓம்: Chapter 1 – The Blood Moon’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 4, 2026 at 5:12 pm

சென்னை, அக்.4, 2026: தனுஷ் மற்றும் மலையாள நடிகர் மம்முட்டி இணைந்து நடித்துள்ள ‘ஓம்: Chapter 1 – The Blood Moon’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷ் மற்றும் மம்முட்டி முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் என்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் தனுஷ் மற்றும் மம்முட்டி இடம்பெற்ற புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், மம்முட்டியுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாசருதீன் ஷா உள்ளிட்டோரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, ஒளிப்பதிவை எழில் அரசு கே. மேற்கொண்டுள்ளார்; ஆர்.கலையானவன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் மரம் வெட்டும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ‘ஓம்’ திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்டோபர் 15-ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே தனது படத்தை வெளியிடுவதைத் தவிர்க்கும் வகையில் வெளியீட்டை ஒத்திவைப்பதாக தனுஷ் தெரிவித்திருந்தார். மேலும், தீபாவளி வெளியீட்டையும் தவிர்க்க முடிவு செய்ததாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து தற்போது நவம்பர் 20-ஆம் தேதி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரியல் ஃலைப் ஹீரோ கேப்டன் ஸ்மித் மச்சார்.. நடிகை பாக்யஸ்ரீ!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com